யாழில் திறக்கப்பட பாடசாலைகள்!! -தொற்று நீக்கும் நடவடிக்கையுடன் ஆரம்பம்- - Yarl Thinakkural

யாழில் திறக்கப்பட பாடசாலைகள்!! -தொற்று நீக்கும் நடவடிக்கையுடன் ஆரம்பம்-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் கட்டமாக  திறக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என, கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.

கவல்துறை விசேட அதிரடிப்படையின் கிருமி தொற்று நீக்கி விசுறும் அணியினர் சகல பாடசாலைகளிலும் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாடசலைகளையும்  கண்கானிப்பதற்காக   பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலாளர்கள்,  காவல்துறையினர் சென்றிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post