நீதிபதியின் கழுத்தை வெட்டுவேன்!! -மன்றில் நின்று கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர்- - Yarl Thinakkural

நீதிபதியின் கழுத்தை வெட்டுவேன்!! -மன்றில் நின்று கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர்-

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியின் கழுத்தை வெட்டுவேன் என்று அவர் முன்னாலேயே ஒரு சந்தேக நபர் கொலை செச்சுறுத்தல் விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்கின் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருடைய வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதியிடம் சாட்சியம் ஒன்றை தெரிவிக்க வேண்டும் என சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் தன்னுடைய விளக்கத்தினை தனது சட்டத்தரணிவாயிலாக அறிவிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார்.

எனினும் அவரின் சட்டத்தரணி நீதிமன்றிற்கு எந்தவிடயத்தினையும் தெரிவிக்காத நிலையில், சந்தேகநபரான குற்றம்சாட்டப்பட்டவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வேளையில், நீதிபதியிடம் சாட்சியம் ஒன்றை வழங்க வேண்டும் என மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றிற்குள் செல்ல முயற்சித்த போதிலும், கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை தடுத்து நிறுத்தியுடன், ”நீதிபதியின் கழுத்தை வெட்டுவதுடன் தாமும் கழுத்தை வெட்டிக்கொள்வேன்” என தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட குறித்த நபர் மீண்டும் விளக்கமறியலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் குறித்த மரண அச்சுறுத்தல் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post