மனைவியின் கழுத்தை திருகிக் கொன்ற கணவன்!! -குடும்ப சண்டையே காரணம்- - Yarl Thinakkural

மனைவியின் கழுத்தை திருகிக் கொன்ற கணவன்!! -குடும்ப சண்டையே காரணம்-

மனைவிiயின் கழுத்தை கயிற்றால் சுருக்கிட்டு திருகி கணவரே கொலை செய்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நடந்துள்ளதாக பொலிஸாடிர் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவத்தில் ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயது பெண்னே உயிரிழந்தவர் என்றும், சம்பவம் தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பமான கணவன் - மனைவிக்கிடையே  சம்பவதினமான நேற்று புதன்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில் மனைவியின் கழுத்தை கணவன் கயிற்றால திருகியதனால் மனைவி உயிரிழந்துள்ளர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 27 வயதுடைய கணவனை கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  மட்டு போதனா  வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  
Previous Post Next Post