பருத்தித்துறையில் சினிமா பாணியில் குழந்தை கடத்தல்!! - Yarl Thinakkural

பருத்தித்துறையில் சினிமா பாணியில் குழந்தை கடத்தல்!!

பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் வாகனம் ஒன்றில் சென்றவர்களால் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டிருக்கின்றது. 

அல்வாய் வடக்கு சிறிலங்கா பாடசாலைக்கு அருகில் நேற்று இரவு 8 மணியளவில் வாகனத்தில் சென்றவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பச்சிளம் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். 

இதனையடுத்த அந்தப் பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், பிரிந்து வாழும் குழந்தையின் தந்தையை தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் குறித்த குழந்தை தந்தையாலே கடத்தப்பட்டுள்ளது என்றும், குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்திருந்த நிலையில் மனைவியுடன் இருந்த குழந்தையை அவர் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது கடத்தப்பட்ட குழந்தை தந்தையுடன் சாவகச்சேரியில் உள்ளது என்றும் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரiணியல் தெரியவந்துள்ளது. 

Previous Post Next Post