-பங்களாதேஸ் கிரிக்கட் வீரருக்கு கொரோனா- - Yarl Thinakkural

-பங்களாதேஸ் கிரிக்கட் வீரருக்கு கொரோனா-

பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் வீரர் மஸ்ரபி மோட்டாசா (mashrafe mortaza) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பில் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேசில் இதுவரை ஆயிரத்து 400 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post