மரண சடங்கில் வாய்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது!! -இருபாலையில் சம்பவம்- - Yarl Thinakkural

மரண சடங்கில் வாய்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது!! -இருபாலையில் சம்பவம்-


யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிசிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிகக்ப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மடத்தடிப்பகுதியில் இன்று நடந்த மரணச் சடங்கில் இரு தரப்பினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது வாள் வெட்டு சம்பவமாக மாறியுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post