நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை வடக்கு மத்திய அதிவேகப் பாதையின் முன்னேற்றம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிகரிகளுடன் கலந்துரையாடல் நடத்திய பிரதமர் துரித கதியில் அவ்வீதி அமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுடனும் சந்திப்புக்களை நடத்திய பிரதமர் குழந்தை ஒன்றை தூக்கி கொஞ்சி குலாவி மகிழ்ச்சியினை மக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Post a Comment