இராணுவத்தை அழித்த நான் கொரோனாவை விட ஆபத்தானவன்!! -கருணா ஆவேச பேச்சு- - Yarl Thinakkural

இராணுவத்தை அழித்த நான் கொரோனாவை விட ஆபத்தானவன்!! -கருணா ஆவேச பேச்சு-

கொரோனா தொற்றினை விட நான் தான் அபாயகரமானவன்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காரைத்தீவு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் “கருணா கொரோனாவை விட அபாயகரமானவர் என தெரிவித்திருந்தார்”
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கருணா அம்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- 
தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் போது ஆணையிரவு முகாமில் இருந்த அதிகமான இராணுவத்தை ஒரே இரவில் அழித்துள்ளேன். அதேபோன்று கிளிநொச்சியிலும் பல இராணுவ வீரர்களை கொன்றுள்ளேன் என குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post