கிளுவன் தடியால் அடித்து பொலிஸ் சித்திரவதை!! -இரு கால்களும் இல்லாதவர் மனித உரிமை ஆணைக்குழவில் முறைப்பாடு- - Yarl Thinakkural

கிளுவன் தடியால் அடித்து பொலிஸ் சித்திரவதை!! -இரு கால்களும் இல்லாதவர் மனித உரிமை ஆணைக்குழவில் முறைப்பாடு-

பொலிஸாரால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட இரு கால்களையும் இழந்த விசேட தேவையுடையவர் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். 

காங்கேசன்துறை பொலிஸாருக்கு எதிராகவே அவர் தனது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

கடந்த மாதம் 24 ஆம் திகதி இரவு 11 மணியளவில் கீரிமலை இரு குழக்களுக்கு இடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றது. இது குறித்த தகவல் காங்கேசன்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்க காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் மு.உதயானந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்றிருந்தனர். 

இதன் போது குறித்த உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. வாள் வெட்டுக்கு இலக்கான உப பொலிஸ் பரிசோதகரை ஏனைய பொலிஸார் அங்கிருந்து மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மேலதிக பொலிஸார், உப பொலிஸ் பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் சிறப்புத் தேவையுடையவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மறுநாள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்திருந்தார்.

இந்த நிலையிலையே, அன்றைய தினம் இரவு தம்மை கைது செய்த பொலிஸார் தன்னை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து ‘கிளுவன்’ தடியால் மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் , சம்பவத்துடன் தொடர்பில்லாத தன்னை பொய் குற்றசாட்டு சுமத்தி கைது செய்து தாக்கி சித்திரவதை புரிந்ததாக பாதிக்கப்பட்ட நபர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை கையளித்துள்ளார்.
Previous Post Next Post