செல்வம் அடைக்கலநாதன் போதைப்பொருள் வியாபாரி!! -இன்றும் அதே தொழிலை செய்கிறார்: கூறுகிறார் கருணா- - Yarl Thinakkural

செல்வம் அடைக்கலநாதன் போதைப்பொருள் வியாபாரி!! -இன்றும் அதே தொழிலை செய்கிறார்: கூறுகிறார் கருணா-

ரெலோ அமைப்பின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் போதைப்பொருள் வியாபாரி என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ள கருணா என்னை விமர்சிக்க அவருக்கு வெட்கமில்லையா என கேள்வியும் எழுப்பியுள்ளார். 

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே கருணா மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மன்னாரில் போதைப்பொருள் வியாபாரம் செய்து அரசியலுக்கு வந்தவரே செல்வம் அடைக்கலநாதன். இப்போதும் அந்த வர்த்தகத்தை அவர் இரகசியமாக செய்து வருகின்றார்.

இவ்வாறான ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைக்கலம் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல மீளவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட சம்பந்தன் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வாறானவருக்கு என்னை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது என்றார். 

Post a Comment

Previous Post Next Post