பிரதமரை சந்தித்த வடக்கு ஆளுநர்!! - Yarl Thinakkural

பிரதமரை சந்தித்த வடக்கு ஆளுநர்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிறகும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்சுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று அலரி மாளிகையில் நடந்துள்ளது. 

இச் சந்திப்பின் போது கொவிட்- 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர்  வடக்கு  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோத படகு பிரவேசம் ஆகியவற்றை தடுப்பது குறித்தும் பேசப்பட்டது. 

மேலும் வடக்கு மாகாண மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் அடிப்படை சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post