யாழ் மீண்டும் முடக்கப்படுமா? இணுவிலில் தங்கியிருந்த இந்திய வியாபாரிக்கு கொரோனா!! - Yarl Thinakkural

யாழ் மீண்டும் முடக்கப்படுமா? இணுவிலில் தங்கியிருந்த இந்திய வியாபாரிக்கு கொரோனா!!


யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் மிக நீண்ட நாட்கள் தங்கியிருந்த புடவை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இந்தியாவில் உறுதி  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கணேஸ்பாபு என்ற 40 வயது நபருக்கே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த மாசி மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்த நிலையில் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

கொரோனா பரவல் அச்சம் நாட்டில் ஏற்பட்டதை அடுத்து ஊடரங்கு சட்டத்தினால் நாடு முடக்கப்பட்டது. இதனால் குறித்த நபரும் இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இங்கேயே தங்கியிருந்து தனது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவர், கொழும்பில் தங்கவைக்கப்பட்ட பின்னர் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இந்தியாவில் இருந்து கொழும்பு வந்த கப்பலின் ஊடாக அவர் கடந்த முதலாம் திகதி இந்தியா நோக்கிச் சென்றுள்ளார்.

இந்தியாவில் நடந்த பரிசோதணையில் அவருக்க கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மறுநாளே உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post