ஆயரை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி - Yarl Thinakkural

ஆயரை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்திற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போட்டியிட்டும் நிலையில் இன்றைய தினம் மறைமாவட்ட ஆயரை சந்தித்து தேர்தல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடி, ஆயரின் ஆசி பெற்றனர்

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் குறித்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post