போராளிகளின் தியாகங்கள் வீண்போகாது!! -மாவை சேனாதிராஜா- - Yarl Thinakkural

போராளிகளின் தியாகங்கள் வீண்போகாது!! -மாவை சேனாதிராஜா-

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளின் தியாகங்கள் உன்னதமானவை, அவர்களின் தியாகங்கள் மீதுதான் நாங்கள் எழுந்து நிற்கின்றோம் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

இன்று மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை வெல்லாவெளியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மாவை சேனாதிராஜா சந்திந்தார். 

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய ஞா.சிறிநேசனின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு இடம்பெற்றது. 

இதன் போது மாவை சேனாதிராஜா குறிப்பிடுகையில், போராளிகளின் தியாகமானது உன்னதமானது, எவராலும் எண்ணிப்பார்க்க முடியாத விடயம். அவர்களின் தியாகங்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். 

அந்த தியாகத்தின் மீதுதான் நாங்களும் எழுந்து நிற்கின்றோம். எனவே போராளிகள் போராடியதும், நாங்கள் வாதாடியதும் வீண்போகவில்லை. நாங்கள் ஒருபோதும் சோரம் போகமாட்டோம் என்று தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post