யாழ் ஆரியகுளத்தில் விபத்து!! -பண்டத்தரிப்பு வாசி சாவு- - Yarl Thinakkural

யாழ் ஆரியகுளத்தில் விபத்து!! -பண்டத்தரிப்பு வாசி சாவு-

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இன்று செவ்வாக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் பற்றிமாதா வீதி பண்டத்தரிப்பை சேர்ந்த அருளப்பு லோகு (வயது 50) என்பரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- 

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கு அன்மையில் யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post