பல ஊர்வலங்களில் பங்குகொண்ட யானை மரணம் - Yarl Thinakkural

பல ஊர்வலங்களில் பங்குகொண்ட யானை மரணம்

ஸ்ரீ தலதா மாளிகையின் பல் நினைவுச்சின்னத்தினை ஊர்வலமாக பல முறை எடுத்துச் சென்ற கேகாலை மில்லங்கொடவைச் சேர்ந்த ஜெயந்தி, பொடி ராஜா என்று அழைக்கப்படும் 68 வயதான யானை நேற்று மாலை உயிரிழந்துள்ளது.

அத்துடன், எஸ்.ஆர்.எஸ் மில்லங்கோடா என்பவரால்  நான்கு வயதில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்ற பொது ஏலத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 ரூபா பணத்தைச்  செலுத்தி யானையை ஏலத்திலிருந்து மீட்டுள்ளார்.

குறித்த யானை 1956 புத்த ஜெயந்தி வருடத்தில் வாங்கப்பட்டதால், அதற்கு ஜெயந்தி என்ற பெயர் வழங்கப்பட்டது.

குறித்த யானை உயிரிழக்கும் போது 9 அடி உயரம் இருந்தது. இந்த யானை நாடு முழுவதும் பல ஊர்வலங்களில் பங்கேற்றுள்ளது அத்தோடு, 2016 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில்  பல முறை நித்திய கலசம் சுமந்து சென்றுள்ளது.

அத்தோடு 2017 ஆம் ஆண்டின் முதல் ரண்டோலி பெரஹேராவின் நித்திய கலசத்தைச் சுமந்தாக முன்னாள் மாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த மில்லங்கொடதெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மில்லன்கொட பெரியவர் வளர்த்த யானை 2011 ஆம் ஆண்டு ஆகட்ஸ் 7 ஆம் திகதி உயிரிழந்தது. மில்லன் கொட யானைத்தா ஆசியாவின் மிக நிளமான யானை அத்தோடு ஸ்ரீ தலதா மாளிகையின் நித்திய கலசத்தைப் பல தடவைகள் சுமக்க புண்ணிம் செய்த யானை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post