கொரோனாவால் பலியான கர்ப்பிணி!! -சிசுவை உயிருடன் மீட்ட வைத்தியர்கள்- - Yarl Thinakkural

கொரோனாவால் பலியான கர்ப்பிணி!! -சிசுவை உயிருடன் மீட்ட வைத்தியர்கள்-

அமெரிக்காவின் கொரோனா தொற்றுக்குள்ளான நிiலியல் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

இருப்பினும் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து சிசுவினை மருத்துவர்கள் உயிருடன் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேடன் ரூஜை சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கு மே மாதம் இறுதியில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சையில் இருந்த குறித்த பெண் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

அவர் 25 வாரங்கள் கர்ப்பிணியாக இருந்த நிலையில் இறந்தமையால் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.

ஒரு கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post