தமிழ் மக்கள் மீது எங்களுக்கு அதிக உரிமை உண்டு!! -விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை தெரிவிப்பு- - Yarl Thinakkural

தமிழ் மக்கள் மீது எங்களுக்கு அதிக உரிமை உண்டு!! -விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை தெரிவிப்பு-

தமிழ் மக்கள் மீது களத்தில் போராடிய போராளிகளுக்கே அதிக உரிமை உண்டு என்று விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை தலைவர் த.இ.மலரவன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மலரவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்:-

களத்திலே போராடிய போராளிகள் நாங்கள் எங்களுக்கே அதிகமான உரிமை இருக்கின்றது இந்த மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு.

புலத்திலே இருக்கின்ற தமிழர்களிடம் பேசி களத்திலே இருக்கின்ற எமது உறவுகளுடனும் உரையாடி நாங்கள் இது சம்பத்தமாகத்தான் நாங்கள் தேர்தல் களத்திற்கு வந்திருக்கின்றோமே தவிர ஏனைய கட்சிகளை விமர்சிப்பதற்கோ அல்லது ஏனைய கட்சிகளை எடுத்து இவர்கள் அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என்பதையும் தாண்டி நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் எமது மக்களுக்கா என்பதை நோக்கிய பயணந்தான் இது.

நாங்கள் போராளிகள் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருடனும் உரையாடி வடகிழக்கில் பெரும்பாலும் வாழுகின்ற, முக்கியமாக போராளிகள் பொதுமக்கள் பேசி வருகின்றோம். 

ஏனென்றால் அரசியல் என்பதும், போராளிகள் என்பதும் பொது மக்களுக்காகத் தான் அது உங்களுக்கு நன்றாக தெரியும்.தனிப்பட்ட போராளிகளுக்கான என்று அரசியல் இல்லை.

நாங்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து இருக்கின்றோம் ,பேசி இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையானது போராளிகள் அனைவரையும் ஒன்றிணைத்து, தமிழ் கட்சிகளுடனும் பேசி அனைவரும் எதிர்வரும் காலங்களில் ஓரணியில் திரண்டு மக்களின் பலத்தை பலமாக்குவது தான் எங்களின் சக்தி.

நாங்கள் இன்னொருவருடன் சேர்ந்து செயற்படுவோம் என்பதையும் தாண்டி, எங்களுடன் அனைவரையும் உள்வாங்கிக்கொண்டு இந்த  சக்தியாக விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையை பலப்படுத்திக்கொண்டு பயணிப்பதுதான் எங்களுடைய நோக்கம்.

அது சம்பந்தமாக நாங்கள் போராளிகளுடனும், மக்களுடனும் கலதுரையாடிக்கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post