வல்லை பகுதியில் குண்டு வெடிப்பு!! -இராணுவ அதிகாரி படுகாயம்- - Yarl Thinakkural

வல்லை பகுதியில் குண்டு வெடிப்பு!! -இராணுவ அதிகாரி படுகாயம்-

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தல்துள்ளார்.

வல்லை பகுதியில் உள்ள இராணுவ முகமிற்க்கு பொறுப்பான இரண்டாம் நிலை அதிகாரியும் சிப்பாய் ஒருவரும் இன்று மாலை வழமை போன்று நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது வீதியால் சென்ற மோட்டார் சைக்கில் ஒன்றில் இருந்து பொதி ஒன்று கீழே விழுவதை அவதானித்துள்ளனர்.

குறித்த பொதியை சோதனை செய்த போது அது திடீரென வெடித்துள்ளது.

இதில் குறித்த அதிகாரி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கா வைத்தியசாலையில் சேர்காப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்க்கு வந்த தடயவில் பொலிஸார் ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post