நயினாதீவு செல்ல பாஸ்: நடைமுறை நீக்கப்பட்டதாக அறிவிப்பு!! - Yarl Thinakkural

நயினாதீவு செல்ல பாஸ்: நடைமுறை நீக்கப்பட்டதாக அறிவிப்பு!!

நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை அடுத்து நீக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் வினவியது.

எமக்கு பதிலலித்த பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மால் அவ்வாறான எந்த பாஸ் நடமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் உடனடியாவே நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப போலீஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து எம்மால் குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு உப காவலரண்களில் பொறுப்பதிகர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தமக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் இனி இவ்வாறான மட்டுப்பாடுகளில் விதிக்கமாட்டோம் என எமக்கு தெரிவித்தனர் என்றார். 

Post a Comment

Previous Post Next Post