மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பளை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தபோது கார் ஒன்றினை வழிமறித்து சோதிக்க முயன்றுள்ளனர். எனினும் கார் நிற்காமல் சென்றிருக்கின்றது.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் பின்தொடர்ந்து சென்று வழிமித்தபோது, காரை ஓட்டிச் சென்றவர் தன்னை ஒரு சட்டத்தரணி என பொலிஸாருக்கு அறிமுகம் செய்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் இருப்பதை அறிந்து கொண்ட பொலிஸார்
சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். எனினும் லைட் வேகக்கிள்ஸ் சாரதி அனுமதி பத்திரம் அவரிடம் இல்லை. இதனடிப்படையில் மதுபோதையில் சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக
தெல்லிப்பழை பொலிஸாரினால் நாளை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
Post a Comment