யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி ஆண்டகையின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணட் ஞானப்பிரகாசம் ஆண்டகை சனிக்கிழமை இவ் உருவச்சிலையை திறந்துவைத்தார். ஆயர் பெற்றக்கினி ஒறற்ரோறியன் சபையைச் சார்ந்த இத்தாலி நாட்டவர்.
இவர் 1846 ஆம் ஆண்டு கொழும்பு புனித லூசிய பேராலயத்தில் ஆயராக அருட்பொழிவு பெற்று 1849 ஆம் ஆண்டு யாழ்.மறைமாவட்ட அப்போஸ்தலிக்க விக்காராக நியமிக்கப்பட்டு பணிப்பொறுப்பை பெற்றுக்கொண்டார்.
இவரின் உருவச்சிலையை யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் சிற்பக்கலையை பயின்ற ஆசிரியர்களான கபேசன், கிருபா ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
Post a Comment