யாழில் புத்தரின் சிலை மீது கல்வீச்சு தாக்குதல்!! -ஆரியகுளம் நாக விகாரையில் சம்பவம்- - Yarl Thinakkural

யாழில் புத்தரின் சிலை மீது கல்வீச்சு தாக்குதல்!! -ஆரியகுளம் நாக விகாரையில் சம்பவம்-

யாழ்ப்பாணம் ஆரியகுளப் பகுதியில் உள்ள நாக விகாரையின் புத்தரின் சிலை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெருமளவு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத விசமிகள் சிலரால் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையின் பருத்தித்துறை வீதி பக்கமாக உள்ள புத்தரின் சிலை மீதே கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது புத்தரின் சிலைக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும், சிலையை பாதுகாப்பதற்காக முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி குறித்த தாக்குதல் உடைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post