தமிழ் பொலிஸ் உயிரிழப்பில் சந்தேகம்!! -யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சடலம் அனுப்பிவைப்பு- - Yarl Thinakkural

தமிழ் பொலிஸ் உயிரிழப்பில் சந்தேகம்!! -யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சடலம் அனுப்பிவைப்பு-


கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு சேவையின் புலனாய்வு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் குறித்த நபருடைய சடலம் பிரிதே பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடியைச் சேர்ந்த கமல்ராஜ் (வயது 21) என்பவர் கல்முனை உள்ள தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றியிருந்த நிலையில் நேற்று உயிரிழந்த நிலையில் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்த நிiயில், அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை அவரின் உயிரிழப்பு தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post