கொரோனாவால் மற்றுமொரு உயிரிழப்பு!! - Yarl Thinakkural

கொரோனாவால் மற்றுமொரு உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடையவதே இதன் போது உயிரிழந்தவர் ஆவார். இங்கு வந்த அவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


Previous Post Next Post