கொக்குவில் இந்துக் கல்லூரியில் இரத்த தானம்!! -97 பேர் குருதி வழங்கினர்- - Yarl Thinakkural

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இரத்த தானம்!! -97 பேர் குருதி வழங்கினர்-

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடந்த மாபெரும் இரத்ததான முகாம்மில் 100க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் பங்குபற்றியும் அதில் சில நிராகரிப்பின் பின் 97 பேர் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

விதையனைத்தும் விருட்சமே அமைப்பு ஒழுங்கு செய்த இந்நிகழ்விற்கு ரீமெக்ஸ் (RE Max) நிறுவனம் தனது அனுசரணையை வழங்கியிருந்தது.
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினால் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஒவ்வொரு வார இறுதியிலும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாவற்குழி, கீரிமலை (கூவில்) ஆகிய இடங்களில் நடாத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட குருதிக்கொடையாளர்களுடன் வெற்றியுடன் நடைபெற்று முடிவடைந்தது.

இன்று சனிக்கிழமை யாழ் கொக்குவிலில் நடாத்தப்பட்டது.

ரீமெக்ஸ் (RE Max) நிறுவனத்தின் அனுசரணையில் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் கொக்குவில் கிளை உறுப்பினர் ச.துவாரகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


Post a Comment

Previous Post Next Post