கொரோனாவின் கோர பிடி!! -90 இலட்ச தொற்றாளர்கள், 5 இலட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை- - Yarl Thinakkural

கொரோனாவின் கோர பிடி!! -90 இலட்ச தொற்றாளர்கள், 5 இலட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை-

கடந்து சென்ற 24 மணி நேரத்தில் மட்டுமு; சர்வதேச ரீதியில் ஒரு இலட்சத்தி 29 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய உலகலாவிய ரீதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்து 37 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவிலேயே கடந்த 24 மணித்தியாலங்களில் 25 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 266 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் அடிப்படையில் அமெரிக்காவில் மொத்தமாக இதுவரை கொரேனா வைரசால் 23 லட்சத்து 55 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 246 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை பிலேசிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 16 ஆயிரத்து 851 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 601 பேர் பலியாகியுள்ளனர்.

அதேநேரம் பிரேஸிலில் இதுவரை 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேலும் தெற்காசிய நாடுகளில் அதிகளவு பதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 15 ஆயிரத்து 186 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், அங்கு 426 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கமைய இந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றால் 4 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 703 பேர் பலியாகியுள்ளனர்.

அதேநேரம் உலகலாவியல ரீதியில் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

எவ்வாறெனினும் சர்வதேச ரீதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 47 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post