ஏ-9 வீதியில் ஆட்டோவை தூக்கி எறிந்த யானை!! -தந்தையும் மகளும் காயம்- - Yarl Thinakkural

ஏ-9 வீதியில் ஆட்டோவை தூக்கி எறிந்த யானை!! -தந்தையும் மகளும் காயம்-

ஏ-9 வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது காட்டு யானை நாடத்திய தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புதிதாக வாங்கிய முச்சக்கர வண்டியில் தந்தையும் மகளும் பயணம் செல்லும் போது கெலேவையில் இருந்து ஒன்னரைக் கிலோ மீட்டர் செல்லும் வேளையில் இசுபத்தான மஹா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து யானை தாக்குதல் நடத்திச் சென்றுள்ளது.

முச்சக்கர வண்டி தாக்குதலுக்குள்ளான போதிலும் அதில் இருந்த தந்தை மகள் இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் அருகிலுள்ள பிரதேசவாசிகள் உடனடியாக மதவாய்ச்சி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த இடத்தில் யானைகளின் தாக்குதலுக்கு பலர் இலக்காகியுள்ளனர். எனவே இவ்விடத்தில் பாதுகாப்பு மின்வேலி அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Previous Post Next Post