மின்னல் தாக்கி 83 பேர் பலி!! - Yarl Thinakkural

மின்னல் தாக்கி 83 பேர் பலி!!

இந்திய பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு 83  பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் இடியுடன் கூடிய கனமழைக்கு 83 பேர் உயிரிழந்து இருப்பது பீகார் மாநில மக்களுக்கு  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இயற்கை பேரிடரால் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகளையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிச் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிவித்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post