80 இலட்சம் பேரை தாக்கிய கொரோனா!! - Yarl Thinakkural

80 இலட்சம் பேரை தாக்கிய கொரோனா!!

உலகம் முழவதிலும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றபவட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,013,358 ஆக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. 

உலகம் முழுவதும் 4,137,226 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 435,977 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,162,228 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 117,858 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 867,882 பேரும் ரஷ்யாவில் 537,210 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post