பிளைக்கில் சாராயம் விற்பனை!! -மானிப்பாயில் சிக்கினார் 65 வயது பெண்- - Yarl Thinakkural

பிளைக்கில் சாராயம் விற்பனை!! -மானிப்பாயில் சிக்கினார் 65 வயது பெண்-

மதுபான சாலை மூடப்பட்ட நிலையில் பிளைக்கில் சாரயம் விற்பனை செய்த 65 வயது பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற உத்தியோகத்தர் இருவர் பணம் கொடுத்து மதுபானத்தை வாங்கிய பின்னர் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுத்தனர்.

அரச விடுமுறை நாளில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 65 வயதுடைய பெண் ஒருவரும் 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post