5 பேருக்கு கொரோனா!! -ஓமானில் இருந்து வந்தவர்களாம்- - Yarl Thinakkural

5 பேருக்கு கொரோனா!! -ஓமானில் இருந்து வந்தவர்களாம்-

நாட்டில் மேலும் புதிதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த 5 பேரும் ஓமானில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அமைச்சு மேலும் தகவல் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2047 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 33 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி தற்போது வரை 1711 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post