கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 522 பேர் நாட்டிற்கு வந்துள்ளார்கள் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகத நிலைமை மகிழ்ச்சியடையக் கூடியதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், சுகாதார தரப்பினர், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைவரினதும் அர்ப்பணிப்புடனான சேவையை இந்த தருணத்தில் நினைவு கூர்வதாகத் தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்று பரவுகைகயை கட்டுப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.