முன் பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!! -50 வீத மாணவர்களுடன் இயங்கலாம்: -பவித்ரா வன்னியாரச்சி- - Yarl Thinakkural

முன் பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!! -50 வீத மாணவர்களுடன் இயங்கலாம்: -பவித்ரா வன்னியாரச்சி-

நாட்டில் உள்ள அனைத்து முன் பள்ளிகளும் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளுக்கிணங்க 50 வீத மாணவர்களுடன் ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், முடக்கப்பட்ட நாடு மீண்டும் திறக்கப்பட்டு 45 நாட்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தமது பிள்ளைகளுக்கான ஆரம்பப் பாடசாலைகளைத் திறப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு பெற்றோர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அரசாங்கம் உடனடியாக அதனைக் கவனத்திற் கொண்டு ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முன் பள்ளிகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post