தேங்கிக்கிடக்கும் 5 இலட்சம் கடிதங்கள்!! -விரைவில் உரியவர்களிடம் சென்று சேரும்- - Yarl Thinakkural

தேங்கிக்கிடக்கும் 5 இலட்சம் கடிதங்கள்!! -விரைவில் உரியவர்களிடம் சென்று சேரும்-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட சூழ்நிலையால் பதிவுசெய்யப்பட்ட 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் விநியோகிக்கப்படாமல் அஞ்சல் அலுவலகத்தில் தேங்கியுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டதால் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளுக்கு விநியோகிக்கப்படாத கடிதங்களே இவ்வாறு தேங்கிக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அத்துடன் பஸ்கள் மற்றும் ரயில்களின் பயணக் கட்டுப்பாடுகள், ஊழியர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து பணிக்கு வருகை தருவதில் அசாதாரண நிலை காணப்பட்டமையால் கடிதங்களை விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த கடிதங்களை விரைவில் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post