4 கிராம் ஹேரோயினுடன் இளைஞர் கைது!! -யாழ்.பெரியகோவிலடியில் மாலை சம்பவம்- - Yarl Thinakkural

4 கிராம் ஹேரோயினுடன் இளைஞர் கைது!! -யாழ்.பெரியகோவிலடியில் மாலை சம்பவம்-

யாழில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்க விரைந்த பொலிஸார் அங்கு திடீர் சோதணைகளை நடத்தியிருந்தனர். இதன் பேர்து ஹெரோயின் போதைப் பொருளை தனது கடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடம் இருந்து 4 கிராம் 680 மில்லிகிராம் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post