திருட்டு நகைகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதானதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் வேவ்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்.பொலிஸார் மகைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பவட்டவரிடம் நடந்த விசாரணையில் அவர் திருடிய நகைகளை விற்பனை செய்துவிட்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இருப்பினும் தான்னிடத்தில் நகைகளை பெற்றுக் கொண்டு பணம் கொடுத்தவர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை கொண்டு நகைக்கடைகளுக்குச் சென்ற பொலிஸார், அவர் இனங்காட்டிய கடை உரிமையாளர்களிடம் விசாரணை செய்த பின்னர் கைது செய்துள்ளனர். இவ்வாறு 4 நகைக்கடை உரிமையாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்த நகை கடை உரிமையாளர்களில் மூவர் கஸ்தூரியார் வீதியிலும், ஒருவர் மின்சார நிலைய வீதியிலும் கடை நடத்துபவர்கள்.
ஒரு கடைஉரிமையாளர் மட்டும் 18 கிராம் தங்கத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறுவதோடு பொலிஸார் இரகசிய விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment