தீவிரம் காட்டும் கொரோனா!! -புதிதாக 42 கடற்படைக்கு தொற்று- - Yarl Thinakkural

தீவிரம் காட்டும் கொரோனா!! -புதிதாக 42 கடற்படைக்கு தொற்று-

நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கனள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றும் 48 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களின் அதிகப்படியாக கடற்படையைச் சேர்ந்த 42 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது,
இந்தியாலிருந்து நாடு திரும்பிய 3 பேரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவரும் டுபாயில் இருந்து நாடு திரும்பிய ஒருவருமாக 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்னர்.

இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் 947 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுறுதியாகியிருந்த மேலும் 3 பேர் நேற்று தினம் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு  தெரிவித்துள்ளது

Previous Post Next Post