இணுவிலில் 3 வீடுகள் முடக்கம்!! -தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் சுகாதா துறை- - Yarl Thinakkural

இணுவிலில் 3 வீடுகள் முடக்கம்!! -தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் சுகாதா துறை-

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இணுவில் மற்றும் ஏழாலை பகுதியில் சில வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

இணுவில் அங்கலப்பாய் பகுதியில் குறித்த புடவை வியாபாரி தங்கியிருந்த வீடும், அந்த வீட்டினை வாடகைக்கு கொடுத்தவரின் இணுவில் வேம்போலைப் பகுதியில் உள்ள வீடும் நேற்று இரவு முழமையாக முடக்கப்பட்டு அங்குள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார். 
Previous Post Next Post