கொரோனா சந்தேகம்!! -இராணுவ பாதுகாப்புடன் வவுனியா கொண்டுவரப்பட்ட 284 பேர்- - Yarl Thinakkural

கொரோனா சந்தேகம்!! -இராணுவ பாதுகாப்புடன் வவுனியா கொண்டுவரப்பட்ட 284 பேர்-

அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்த 284 பேர் வவுனியாவில் உள்ள இரு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இலங்கை மீள முடியாமல் அமெரிக்காவில் சிக்கியிருந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்டவர்களில் 184 பேர் இராணுவப் பாதுகாப்புடன் இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டு பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிங்கப்பூரில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட 100 பேர் இன்று அதிகாலை வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு இராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டு இரு தனிமைப்படுத்தல் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள 284 பேரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கவுள்ளமையுடன், அவர்களிடம் பீ.சீ.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Post a Comment

Previous Post Next Post