யாழில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் வாள்வெட்டுக்குழவின் தலைவர் ஒருவருக்கு பிறந்நாள் கொண்டாடுவதற்காக ஒன்றுகூடிய 26 பேர் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் வாள் வெட்டு குழுவின் தலைவர் ஒருவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதாக ஏராளமானவர்கள் ஒன்றுகூடியுள்ளார்கள் என்று யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற இடத்தினை முற்றுகையிட்டுள்ளனர். இதன் போது அங்கிருந்து பெரும்பாலானவர்கள் தப்பியோடிய நிலையில் பொலிஸார் அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளனர்.
இதன் போது 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட அதே வேளை 8 மோட்டார் சைக்கில்களும் கைப்பற்றப்பட்டுளள்தாக பொலிஸார் இன்று இரவு தகவல் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றது. ஆதில் உள்ளவர்கள் யாராவது கடந்த காலங்களில் நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்ற ஆராய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment