பெம்மேரியன் நாயை கடத்தி 25,000 கப்பம் வசூலிப்பு!! -அச்சுவேலியில் சம்பவம்- - Yarl Thinakkural

பெம்மேரியன் நாயை கடத்தி 25,000 கப்பம் வசூலிப்பு!! -அச்சுவேலியில் சம்பவம்-

யாழ்.அச்சுவேலியில் பொமேரியன் இன நாயை கடத்தி 25 ஆயிரம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

அச்சுவெலியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் “பொமேரியன்” இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய் திடீரென காணாமல் போயுள்ளது. அதனை அவர்கள் அயலில் தேடி திரிந்த போதும் நாய் கிடைக்கவில்லை. 

நாய் காணாமல் போன அன்றைய தினம் மாலை அவர்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் வசிக்கும் 2 இளைஞர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து உங்கள் நாயை ஒருவர் பிடித்து வைத்துள்ளார். 

அவர் நாளை திருப்பித் தர வேண்டுமாக இருந்தால் 25,000 ரூபாவினை தருமாறு கேட்கின்றார் என்றும்  நாய் வேணும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என நாயின் உரிமையாளரிடம் கூறியுள்ளனர். 

தம்பதியினரும் அதற்கு சம்மதித்து அவர்கள் கேட்ட பணத்தினை கொடுத்துள்ளனர். பணத்தினை பெற்று சென்றவர்கள் அரை மணிநேரத்தில் அவர்களின் நாயை கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு சென்றனர். 

தங்களிடம் நாயை ஒப்படைத்தவர்களே நாயை பிடித்துக் கொண்டு சென்று மறைத்து வைத்திருந்து பணத்தினை பெற்ற பின்னர் நாயை ஒப்படைத்துள்ளார்கள் என்ற சந்தேகம் குறித்த தம்பதியினருக்கு எழுந்துள்ளனர். 

இருப்பினும் தமக்கும் தமக்கும் தமது நாய்க்கும் அந்த நபர்களால் ஏதேனும் ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதனையும் பதிவு செய்யவில்லை.
Previous Post Next Post