கொரோனா தொற்று 2010 ஆனது!! - Yarl Thinakkural

கொரோனா தொற்று 2010 ஆனது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பூசா தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேர் , ஏனைய ஆறு பேர் கடற்படை உறுப்பினர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1602 ஆக உயர்வடைந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 397பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post