கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய பஸ் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்
இன்று சனிக்கிழமை அதிகாலை வவுனியா ஓமந்தை பகுதியில் நடந்த இவ்விபத்தில் 15 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் ஏனைய 5 பேரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment