நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19 பேர் சற்று முன்னர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஸ் நாட்டில் இருந்து தாயகம் அழைத்துவரப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1639 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இலங்கையில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment