தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இரு மாதத்தில் மட்டும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த 12 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒருவருமாக யூன் மாதத்தில் மட்டும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்குவதற்கான முயட்சிகளை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment