வீடு உடைத்து 14 பவுன் நகை கொள்ளை!! -யாழ் ஏழாலையில் சம்பவம்- - Yarl Thinakkural

வீடு உடைத்து 14 பவுன் நகை கொள்ளை!! -யாழ் ஏழாலையில் சம்பவம்-

யாழ்.ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடு உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுலதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை திருடர்களினால் உடைத்து திருடப்பட்டுள்ளது. 

வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் மர்மமான முறையில் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.

வீட்டில் இருந்த 14 பவுன் நகைகளை இதன்போது திருடிச் சென்றுள்ளனர்.வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post