14 வருடமாக மகனை தேடி போராடிய தந்தை!! -நீதி கிடைக்காமலே மரணமடைந்தார்- - Yarl Thinakkural

14 வருடமாக மகனை தேடி போராடிய தந்தை!! -நீதி கிடைக்காமலே மரணமடைந்தார்-

வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி கடந்த 14 ஆண்டுகளாக  தேடிவந்த தந்தை ஒருவர் தனது மகனுக்கு நீதி கிடைக்காமலே இன்று மரணமானார்.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வைரமுத்து சிவகுமார் என்பவரே மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் சிவகுமார் ஜாதவகுமார் 2006 ஆம் ஆண்டு
கொழும்பு வெள்ளவத்தையில் பகுதியில் வைத்து கடத்தப்பட்டார்.

தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கடந்த மூன்று வருடங்களாக தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் தீவிரமாக உறுதியோடு போராடியவர் வைரமுத்து சிவகுமார்.

இதேவேளை இதுவரை நீதி கோரி போராடிவந்த 70 மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post