ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்த பெண்!! -14 மாத சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்- - Yarl Thinakkural

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்த பெண்!! -14 மாத சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்-

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 

நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 3 பிள்ளைகளின் தாயும், நடன ஆசிரியருமான திலின ஹர்ஷினி (வயது 36) என்பவர் காயமடைந்தார். அவருக்கு முள்ளந்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய போதிலும், பூரண குணமடையவில்லை, சில பகுதி உணர்வற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது இடது கண் அகற்றப்பட்டுள்ளது. விரல்கள் சரியாக செயற்படாமலுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, அவரும் மூன்று பிள்ளைகளும் தேவாலயத்தில் இருந்த நிலையில், அவரது ஆறு வயதுடைய இரண்டாவது மகன் தாக்குதலில் உயிரிழந்தார். மற்ற இரு பிள்ளைகளும் காயமடைந்து, குணமடைந்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் பலத்த காயங்களுடன் ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, தனியார் வைத்தியசாலையொன்றில் பல அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post