இணுவிலில் கொரோனா அச்சம்!! -கொழும்பிற்கு அவசரமாக அனுப்பப்பட்ட 13 பேரின் மாதிரிகள்- - Yarl Thinakkural

இணுவிலில் கொரோனா அச்சம்!! -கொழும்பிற்கு அவசரமாக அனுப்பப்பட்ட 13 பேரின் மாதிரிகள்-

இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

சுகாதார அமைச்சின் தொற்றுநொயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்க அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட 13 பேருடைய மாதிரிகளும் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 
Previous Post Next Post